ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞரை சிலர் கடத்திச் சென்றுள்ளதாக அவர் தந்தை போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை ராமருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அவர் அங்கு சென்று ரூ.4 லட்சம் கொடுத்து மகன் ராஜதுரையை மீட்டு வந்துள்ளார்.
வீட்டில் இருந்த ராஜதுரை 8.1.13-ம் தேதி முதல் காணவில்லையாம். இது குறித்து அவரது தந்தை ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கோயமுத்தூரில் வேலை பார்த்த நிறுவனத்தின் பரணி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தனது மகனை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.