முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையம் வனப்பகுதியில் புலி நடமாட்டம் பதிவு: துணை இயக்குநர்

திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனப்பகுதியில் சனிக்கிழமை மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது களப்பணியாளர்கள் ஒரு புலியினை நேரில் பார்த்தனர். பாபநாசம் மலையில் புலி கால்தடம் சேகரிக்கப்பட்டதாக காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:23 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனப்பகுதியில் சனிக்கிழமை மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது களப்பணியாளர்கள் ஒரு புலியினை நேரில் பார்த்தனர். பாபநாசம் மலையில் புலி கால்தடம் சேகரிக்கப்பட்டதாக காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியி்ல் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இக்காப்பகத்தில் கடையம், முண்டன்துறை, பாபநாசம், அம்பாசமுத்திரம், களக்காடு, திருக்குறுங்குடி, மேல்கோதையாறு ஆகிய 7 சரகங்களில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் அடங்கிய 86 குழுக்களாக கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை இந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட வனப்பகுதியில் பணியினை தொடங்கினர். பாபநாசம் வனச்சரகத்தில் பாபநாசம் அருகே கோரையாறு பீட் சேப்பையாறு என்ற இடத்தில் ஒரு புலியின் கால்தடத்தை களப்பணியாளர்கள் கண்டறிந்து பதிவு செய்தனர். கடையம் அருகே மலையில் புலி ஒன்றினை நேரில் பார்த்தனர் என புலிகள் காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி தெரிவித்தனர்.

வனப்பகுதியில் களப்பணியாளர்கள் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 3 தினங்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். திங்கள்கிழமை மாலை திரும்புகின்றனர். விலங்கினங்களின் எச்சம், கால் தடம் மற்றும் வனப்பகுதியில் நேரடியாக பார்க்கும் விலங்கினங்களை ஜி.டி.எஸ் கருவி, நவீன கேமிரா மூலம் பதிவு செய்கின்றனர். சேகரிக்கப்படும் தடயங்கள் தில்லியில் வனஉயிரன பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →