முகப்பு
தற்போதைய செய்திகள்

தை அமாவாசை: தாமிரவருணியில் நீராடி பக்தர்கள் முன்னோர் வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:23 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் நீராடி தர்ப்பனம் செய்து வழிபடுவது வழக்கம். சனிக்கிழமை பாபநாசம், காரையாரில் ஏராளமான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இரைத்து வழிபட்டனர்.

இதையொட்டி பாபநாசம் பாபநாசநாதசுவாமி கோயில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்ப்பனம் செய்ய பாபநாசம், காரையாருக்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் கூட்டம் அலைமோதியது.

முழு கட்டுரையைப் படிக்க →