திருமண மண்டபம் கட்டுவதில் இரு சமுதாயத்தினரிடையே தகராறு: 11 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே தொடர்ந்து
தற்போதைய செய்திகள்திருமண மண்டபம் கட்டுவதில் இரு சமுதாயத்தினரிடையே தகராறு: 11 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே தொடர்ந்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதையடுத்து போலீஸார் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தைலாகுளத்தில் அய்யனார் திருக்கோயில் உள்ளது. இதற்கு பாத்தியப்பட்ட இடத்தில் திருமணம் கட்டுவது தொடர்பாக இரு சமுதாயத்தினரிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. இதனையடுத்து பொது அமைதியை பேணுவதற்காக கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சின்னப்பாண்டி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த தி.காளிமுத்து (55), வே.சுப்பிரமணியன் (46), ரா.மணி (35), அ.பெரியசாமி (45), க.முருகன், சு.காளிமுத்து (60) ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ப.செல்வமகாலிங்க மூர்த்தி (33), க.பழனிச்சாமி (60), அ.முருகானந்தம் (37), அ.சிவசுப்பிர்ணியன் (30), ரெ.அய்யனார் (60) ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.