முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. யில் போலீஸார் மீது தாக்குதல் நடைபெற்ற இடத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

கோட்டையூர் பகுதியில் ஒரு தகவலின் பேரில் போலீஸார் சென்று மதுபானம் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கடந்த 1-ம் தேதி அங்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்கு அன்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சார்பு

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. யில் போலீஸார் மீது தாக்குதல் நடைபெற்ற இடத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

கோட்டையூர் பகுதியில் ஒரு தகவலின் பேரில் போலீஸார் சென்று மதுபானம் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கடந்த 1-ம் தேதி அங்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்கு அன்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சார்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 1-ம் தேதி இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸார் மீது தாக்குதல் நடைபெற்றதன் தொடர்ச்சியாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை 43 பேரை கைது செய்தனர். இதனையடுத்து இப் பகுதியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி. பாலநாகதேவி திங்கள்கிழமை சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

கோட்டையூர் பகுதியில் ஒரு தகவலின் பேரில் போலீஸார் சென்று மதுபானம் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கடந்த 1-ம் தேதி அங்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்கு அன்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் போலீஸ் ஜூப்பில் கோட்டையூர் சென்றிருந்தனர். ஆனால் மணல் திருடும் கும்பல் மீது போலீஸார் இப் பகுதியில் கடும் நடவடிக்கைகள் எடு்த்திருந்ததன் விளைவாக, போலீஸாரை திட்டமிட்டு தாக்க தயாராக இருந்துள்ளனர். மின்தடை பட்ட நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு போலீஸ் ஜூப்பை தாக்கி, இன்ஸ்பெக்டரை பயங்கரமாக தாக்கினர். ஒரு கும்பல் சார்பு ஆய்வாளரை தூக்கிச் சென்று தாக்கியுள்ளது. மேலும் இரு போலீஸார் காயம் அடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தேடி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை போலீஸார் இச் சம்பவம் தொடர்பாக 43 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து இப் பகுதியில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய மதுரை சரக டிஐஜி பாலநாகதேவி திங்கள்கிழமை கோட்டையூர் வந்திருந்தார். அங்கு அவர் பொதுமக்களை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →