திருவள்ளூர் பேக்கரியில் தீ விபத்து: பல லட்சம் சேதம்
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த வாசகம் என்பவருக்கு சொந்தமான கட்டடம் பெரியகுப்பம் ஜே.என்.சாலையில் உள்ளது. அங்கு தலக்காஞ்சேரியைச்சேர்ந்த சக்திவேல்
திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த வாசகம் என்பவருக்கு சொந்தமான கட்டடம் பெரியகுப்பம் ஜே.என்.சாலையில் உள்ளது. அங்கு தலக்காஞ்சேரியைச்சேர்ந்த சக்திவேல் என்பவர் பேக்கரியை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் நேற்று(திங்கள்கிழமை) இரவு வியாபாரம் முடிந்தவுடன் கடையை மூடிவிட்டு சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் பேக்கரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.இதில் பேக்கரியில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்துவிட்டன. அக்கம்பக்கத்தில் இருந்த கடைகளின் காவலர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தந்தனர். தீயணைப்புத்துறை அலுவலர் முருகானந்தம் தலைமையில் வந்த தீயணைப்புவீரர்கள் 1 மணி நேரம்போராடி தீயை அணைத்தனர்.
கடையில் இருந்த உணவு பொருள்கள், மின்சார கருவிகள் உள்பட பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்துவிட்டன. இத்தீவிபத்து குறித்து திருவளளூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.