முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் 20 நிமிடம் முன்னரே புறப்பட்டதால் பயணிகள் அவதி

முன்னறிவிப்பின்றி காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலை 20 நிமிடம் முன்னரே புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

முன்னறிவிப்பின்றி காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலை 20 நிமிடம் முன்னரே புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டை பயணிகள் கண்டித்தனர்.

காரைக்கால் நிலையத்திலிருந்து தினமும் மாலை 4.10 மணிக்கு எர்ணாகுளம் செல்லும் விரைவில் ரயில் புறப்படுவது, காரைக்காலில் கடந்த 2011-ம் ஆண்டு டிச.17-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது முதல் நடைமுறையில் இருந்தது. கடந்த 1.7.2012 முதல் தெற்கு ரயில்வே ரயில் நேர அட்டவணை வெளியிட்டதில், 4.10 என்பது 3.50 மணி என மாற்றப்பட்டது. ஆனால் வாய்மொழி உத்தரவின்பேரில் இந்த ரயில் முன்பைபோல் மாலை 4.10 மணிக்கே தினமும் புறப்பட்டுவந்தது.

இந்த நிலையில், அட்டவணை குறிப்புப்படி நிறைவேற்றவேண்டிய ரயில் நேர புறப்பாட்டை 7 மாதங்கள் கழித்து எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென வெள்ளிக்கிழமை 3.50 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டது. இதனால் ரயில் கிளம்பும் நேரத்தில் நிலையத்திற்கு வந்த பயணிகளும், ரயில் சென்ற பிறகு நிலையத்திற்குள் நுழைந்த பயணிகளும் பயணத்தை மேற்கொள்ளமுடியாமல் பாதிப்புக்குள்ளாயினர்.

இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள் தரப்பி்ல் கூறும்போது, எங்களுக்கு வந்த குறிப்பின்படி வண்டியை புறப்படச் செய்துவிட்டோம் என தெரிவித்தனர்.

பயணிகள் தரப்பில் கூறும்போது, சுமார் ஒரு மாதம் முன்னரே எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முன் பதிவு செய்திருந்தோம். குழந்தைகளுடன் எப்போதும் 4.10 மணிக்குத்தான் புறப்படுமென நினைத்து 3.50 மணிக்கு வந்தும், ரயிலில் ஏறமுடியவில்லை. இதுகுறித்து ரயில்வேத் துறை எந்தவித முன்னறிவிப்பும் செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை என்றனர்.

காரைக்கால் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ.சிவகணேஷ் ஆகியோர் தகவல் அறிந்து நிலையத்திற்கு சென்று ரயிலை 4.10 மணிக்கு புறப்படச் செய்யும்படி ரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டும் பயனில்லை. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 4.10 மணிக்கு புறப்படும் ரயில் அருகில் உள்ள நாகூரில் போய் 10 நிமிடம் ஓய்வுக்குப் பிறகு 4.30 மணிக்கே அங்கிருந்து எடுக்கப்படும். ஏன் இந்த அவசரத்தை முன்னறிவிப்பின்றி தெற்கு ரயில்வே செய்தது என்பது தெரியவில்லை.  திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து ரயில்வே அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு புகார் செய்யவுள்ளோம் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →