முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் மனவளர்ச்சி குன்றிய 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மனவளர்ச்சி குன்றிய 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை

Updated On : 18 பிப்ரவரி, 2013 at 8:35 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மனவளர்ச்சி குன்றிய 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.வத்திராயிருப்பு, கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு கணேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 18 வயது நிரம்பிய மன வளர்ச்சி குன்றிய மகள் உண்டு. இவர் வத்திராயிருப்பு நாடார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தின கவனிப்பு மையத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் நாடார் பஜாரில் தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுவிட்டு கணேஷ்வரி வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது கணேஷ்வரியிடம், இதே தெருவில் குடியிருந்து வரும் ராமர் மகன் பூமாலை ராஜா என்பவர் வீட்டு மாடியில் முருக்கு உள்ளது. வா. எடுத்துத் தருகிறேன் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உடல் உறுப்புகளில் பலத்த வலி ஏற்படவே கணேஷ்வரி இது குறித்து தாய் ராமலட்சுமியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கணேஷ்வரி அனுமதிக்கப்பட்டார். ராமலட்சுமி வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சக்திவேலை சந்தித்து புகார் மனு அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள பூமாலை ராஜாவைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.