ராஜபட்ச இந்தியா வருவதற்கு தடை விதிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரின் பிடியில் வைத்து, பின்பு சுடப்பட்டு இறந்துள்ளார் என்பதை இன்றைய தினம் ஆங்கில நாளேட்டில் படங்கள் வெளியாகியுள்ளது. யுத்த தர்மத்தை மீறி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்
இலங்கையில் பிரபாகரனின் இளையமகன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டதை இந்தியஅரசு கண்டிக்க வேண்டும். மேலும் இலங்கை அதிபர் ராஜபட்சவிற்கு வரவேற்பு கொடுப்பதற்கு இந்தியஅரசு முற்றிலுமாக தடுக்க வேண்டும் இந்தியா வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரின் பிடியில் வைத்து, பின்பு சுடப்பட்டு இறந்துள்ளார் என்பதை இன்றைய தினம் ஆங்கில நாளேட்டில் படங்கள் வெளியாகியுள்ளது. யுத்த தர்மத்தை மீறி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையில் சின்னஞ்சிறு பிஞ்சுகளை கூட விட்டுவைக்காமல் நசுக்கி உள்ளதையும், போர் குற்றத்தையும் தாண்டி இன அழிப்பு நடத்துள்ளதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது. இந்தியஅரசு இனியும் ராஜதந்திரன் என்ற பெயரில் சிங்களர்களுக்கு துணை போவதை ஏற்றுக் கொள்ள இயலாது. வருகிற மார்ச் திங்கள் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், வீரப்பன் கூட்டாளிகளுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிப்.20-ம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும்,
தமிழகஅரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் ஏமாற்று மற்றும் மோசடி அறிவிப்பாகும். 50 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் நிதி 90 விழுக்காடும், அரசு நிதி 5 விழுக்காடும் என அறிவித்துள்ளது. இதனால் 49 சதவீத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தமிழகஅரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரமும், தரிசாக போட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும்,சிதம்பரம் அருகே நந்தீஸ்வரமங்களத்தில் இடிமின்னல் தாக்கி இறந்த சத்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமுற்ற மூவருக்கு தலா ரூ.1 லட்சமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூர் மாவட்டம் பணங்காட்டு காலனியில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்ல முடியால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அம்மக்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விடுதலை செழியன், சிறுத்தை கிட்டு ஆகியோர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வருகிறது. எனவே சிறுத்தைகள் மீதான தமிழக காவல்துறை அடக்குமுறை, ஒடுக்குமுறையை கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும்.
நடிகை குஷ்பு துணிச்சலாக கட்சியில் இணைந்து போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவரையும், திமுகவையும் கொச்சைபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது உள்நோக்கத்துடன் கூடிய நாகரீகம் இல்லாத செயலாகும். இதுபோன்ற செய்தியினால் பெண்கள் அரசியலுக்கு வருவது குறைந்து விடும். பெண்கள் இடஒதுக்கீடு தேவையில்லாமல் போய்விடும். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.