முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்: 5 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.முத்துப்பாண்டி (30). இவரது ஆட்டோவில் பரமேஸ்வரி (38), சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சு.பால்ச்சாமி, தும்பையாபுரத்தைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி (58),

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:35 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.முத்துப்பாண்டி (30). இவரது ஆட்டோவில் பரமேஸ்வரி (38), சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சு.பால்ச்சாமி, தும்பையாபுரத்தைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி (58), கருப்பாயி (55) ஆகியோர் ஏறி அழகாபுரி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்துள்ளனர். கிருஷ்ணன்கோவில் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற போது, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழந்து, அதில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

கிருஷ்ணன்கோவில், காவல் நிலையத்தில் எஸ்.கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அரசு பஸ் டிரைவர் பரமேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →