முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:53 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் வெள்ளிக்கிழமை அருப்புகோட்டையிலிருந்து சுந்தரபாண்டியம் நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனராக இருந்துள்ளார்.

பஸ் அழகாபுரி வந்தபோது, அரசபட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பஸ்ஸில் ஏறியுள்ளார். நடத்துனர் பூமிநாதன் டிக்கெட் கேட்டபோது, ராமமூர்த்தி டிக்கெட் எடுக்க மறுத்து தகராறு செய்துள்ளார். மேலும் பூமிநாதனின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இது குறித்து நடத்துனர் பூமிநாதன், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →