ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ்ஸில் அடிபட்டு பள்ளிக்குச் சென்ற குழந்தை உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேராசிரியையின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தை, தாய் கண்ணெதிரே பஸ்ஸில் சிக்கி உயிரிழந்தது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ்ஸில் அடிபட்டு பள்ளிக்குச் சென்ற குழந்தை உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேராசிரியையின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தை, தாய் கண்ணெதிரே பஸ்ஸில் சிக்கி உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேராசிரியையின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தை, தாய் கண்ணெதிரே பஸ்ஸில் சிக்கி உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகர் அருகேயுள்ள அண்ணாநகரில் குடியிருந்து வருபவர் கவிதா (33). இவர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது கணவரும் சென்னையில் பேராசிரியராக உள்ளார். இவர்களுக்கு பிரதிக்ஷா (Prathiksha) (4), ஹர்ஷிதா (3) என்ற இரு குழந்தைகள் உண்டு. இருவரும் கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முறையே எல்.கே.ஜி மற்றும் பிரி கேஜி படித்து வருகிறார்கள்.
வழக்கமாக பிள்ளைகள், பள்ளிப் பேருந்தில் பள்ளிக்குச் செல்வார்கள். வெள்ளிக்கிழமை மூத்த மகள் பிரதிக்ஷாவை மட்டும், தாய் பேராசிரியை கவிதா போகும் வழியில் நான் கொண்டுபோய் இறக்கிவிடுகிறேன் என்று கூறி, தனது இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கில் உள்ள இப் பள்ளியில் பிரதிக்ஷாவை இறக்கிவிடுவதற்காக பேராசிரியை வண்டியை மேற்கிலிருந்து கிழக்கு திசையில் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த பிரதிஷாவின் தலையில் பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்துத் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.