முகப்பு
தற்போதைய செய்திகள்

வியாசர்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் சா.காமேஷ் (24).  இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்குத் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காமேஷ், அண்மையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தாராம்.அதேவேளையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சில ரெளடிகளுக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் சா.காமேஷ் (24).  இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்குத் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காமேஷ், அண்மையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தாராம்.அதேவேளையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சில ரெளடிகளுக்கும் காமேஷூக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் காமேஷ்  நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபர், எஸ்.எம்.நகர் மைதானத்துக்கு அவரை வருமாறு அழைத்ததாக தெரிகிறது.

  உடனே காமேஷ், அந்த மைதானத்துக்கு சென்றார்.  அப்போது காமேஷூக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு கும்பல், அவரிடம் தகராறு செய்ததாம். தகராறு முற்றவே அந்த கும்பல் காமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது.இதில் பலத்த காயமடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ரெளடிகள் மொக்கை ரவி, பாலாஜி,மணி,புஷ்பாகரன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →