முகப்பு
தற்போதைய செய்திகள்

பல்லடம் அருகே வறட்சியால் விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்து, விவசாயி சுப்பிரமணி(51) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:57 AM
பகிர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்து, விவசாயி சுப்பிரமணி(51) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல்லாங்காட்டுத் தோட்டம் என்ற இடத்தில் அவருடைய நிலத்தில் பயிர்களுக்கு நீர் இல்லாமையாலும், வறட்சியால் விவசாயம் பொய்த்து, வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. வங்கியில் இருந்து கடனைக் கட்டாததால் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்ததாம்.

தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →