கேரளாவுக்கு தேனியில் இருந்து ஆடு, மாடுகள் கொண்டு செல்ல தடை
தமிழகத்தின் தேனிப் பகுதியில் இருந்து ஆடு, மாடுகள் கொண்டு செல்ல கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
தமிழகத்தின் தேனிப் பகுதியில் இருந்து ஆடு, மாடுகள் கொண்டு செல்ல கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும், ஆடு, மாடுகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும் என்று மற்றப் பகுதிகளில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கிக்கு செல்லும் கால்நடைகளுக்கு முற்றிலும் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.