போலீஸாரை தாக்கிய திருட்டு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் ஏஎஸ்பி அதரடிப்படையினர் கடந்த டிச.24-ம் தேதி 2 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 போலீஸார் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான வெற்றிச்செல்வன் (28) என்பவரை தேடி சிவசண்முகம்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வெற்றிச்செல்வன் பீர்பாட்டில் மற்றும்
சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் ஏஎஸ்பி அதரடிப்படையினர் கடந்த டிச.24-ம் தேதி 2 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 போலீஸார் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான வெற்றிச்செல்வன் (28) என்பவரை தேடி சிவசண்முகம்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வெற்றிச்செல்வன் பீர்பாட்டில் மற்றும் அரிவாள்மனையால் போலீஸாரை தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் நேரு, குமரேசன் ஆகிய இரு போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிச்செல்வன் சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கடந்த டிச.11-ம் தேதி நீதிபதி பாக்கியம் முன்னிலையில் சரணடைந்தார்.
இந்நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள வெற்றிச்செல்வனை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜன.2-ம் தேதி காவல் நீட்டிப்பு செய்வதற்காக ஆஜர்படுத்த ஆயுதப்படை போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்றத்தில் போலீஸார் தன்னை திட்டியதாக கூறி திடீரென தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் வலது புறக்கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. உடனே நீதிபதி பாக்கியம் வெற்றிச்செல்வனுக்கு ஜன.11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, வெற்றிச்செல்வனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மீண்டும் கொண்டு வந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் போலீஸார் வெற்றிச்செல்வனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் வெற்றிச்செல்வனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கோரி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் கோப்புகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவிற்கு அனுப்பினார். மாவட்ட போலீஸ் சூப்ரணிடன்ட் ராதிகா வெற்றிச்செல்வனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கோப்புகளை அனுப்பி வைத்தார். அதனடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் வெற்றிச்செல்வனை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள வெற்றிச்செல்வனிடம் உத்தரவு நகலை வழங்கினர்.