ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து 70 பீர் பாட்டில்கள் பறிமுதல்
ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-
சிதம்பரத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து புதுச்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட 70 பீர் பாட்டில்களை நகர போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீஸார் நேற்று(ஜன.12) இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மாணவர் ஆலிவெட் முக்திசாவிடமிருந்து அனுமதியின்றி புதுச்சேரியிலிருந்து 3 பெட்டியில் கொண்டு வந்த 70 பீர் பாட்டில்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அம்மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.