ஸ்ரீவிலி. அருகே தொடரும் இரு சமுதாயத்தினர் பிரச்னை: ஒருவர் கைது
கூமாப்பட்டி, இம்மானுவேல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுந்தரம் (38). இவர் ராமசாமிபுரம் அம்பேத்கர் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் சோலைக்குட்டி
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. அருகே தொடரும் இரு சமுதாயத்தினர் பிரச்னை: ஒருவர் கைது
கூமாப்பட்டி, இம்மானுவேல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுந்தரம் (38). இவர் ராமசாமிபுரம் அம்பேத்கர் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் சோலைக்குட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவதால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் தெரு வழியே வந்தவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கூமாப்பட்டி, இம்மானுவேல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சு.சுந்தரம் (38). இவர் ராமசாமிபுரம் அம்பேத்கர் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூமாப்பட்டி, ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் சோலைக்குட்டி (33) என்பவர் ஏன் எங்கள் தெரு வழியே வருகிறாய்? இனிமேல் எங்கள் தெரு வழியே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். மேலும் சோலைக்குட்டி தாக்கியதில் சுந்தரம் காயம் அடைந்தார். இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழ்ககுப் பதிவு செய்து சோலைக்குட்டியை கைது செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வ.புதுப்பட்டி பகுதியில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இரு தரப்பினர் நீண்ட காலமாக மோதிக்கொள்ளும் நிலையை கட்டுப்படுத்த, வ.புதுப்பட்டியில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும், சுமார் 60 போலீஸார் அடங்கிய ஒரு கம்பெனி சிறப்பு காவல் படையினர் நிரந்தரமாக இங்கு நிறுத்தப்படுவார்கள் என்றும் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட்டு, மோதல் சம்பவங்கள் தடுக்கப்பட்டால் தான் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலும் என்று இப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.