முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் வீடு புகுந்து 53 கிராம் தங்க நகைகள் திருட்டு

சிதம்பரம் நகரில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 53 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:04 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 53 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் வரதராஜன் நகரைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் அவரது மனைவி சுந்தரகனிமொழி ஆகியோர் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்புறக் கதவின் தாழ்ப்பாளை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 53 கிராம் தங்க நகைகள் (ஆறேமுக்கால் பவுன்) மற்றும் செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1லட்சமாகும். இதுகுறித்து சுந்தர கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.