பொங்கல் விளையாட்டு போட்டி: ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பு.உடையூரில் புதன்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்பகுதியைச் சேர்ந்த அச்சுதராஜ், பாக்கியராஜ் ஆகியோர் போட்டியை கான வெளியீரில் உள்ள தனது நண்பர்களை அழைத்திருந்தனர். சேத்தியாத்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த போலீஸார் ராஜேஷ் (24), வேலு (23) நற்றும் அவலூரைச் சேர்ந்த தர்மராஜ் (24), பைரவிராஜ் (28), சென்னிநத்தத்தைச் சேர்ந்த பிரபாகரன் (24), கோதண்டவிளாகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோர் ஒரு மினிவேனில் புடையூருக்கு போட்டியை காணச் சென்றனர்.
போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அச்சுதராஜ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அச்சுதராஜ் நணபர்கள் வந்த மினிவேனை அடித்து நொறுக்கினர்.
இதனையடுத்து ஊர்மக்கள் தார்பில் சோழத்தரம் போலீஸார் ரகளையில் ஈடுபட்ட அச்சுதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் சோழத்தகம் போலீஸார் அமைதிபங்கம் விளைவித்து ரகளையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து போலீஸ்காரர்கள் ராஜேஷ், வேலு, தர்மராஜ், பைரவிராஜ், பிரபாகரன், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் அச்சுதராஜ், பாக்கியராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.