முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பிடித்து தாக்கிய மக்கள்!

சிதம்பரம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கினர். கழுத்தில் காயமுற்ற பெண் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கினர். கழுத்தில் காயமுற்ற பெண் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே கிள்ளை முடசல்ஓடை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் மனைவி கவிதாலயா (22). இவர் சனிக்கிழமை மதியம் வீட்டின் பக்கத்து தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று கவிதாலயாவின் கழுத்திலிருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது கவிதாலயாவின் கூக்குரல் கேட்டு அக்கம், பக்கத்திலிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் விசாரித்த போது அந்த இளைஞர் பதில் ஏதும் சொல்ல மறுத்ததால் பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மயக்கமுற்று பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.

தகவல் அறிந்த கிள்ளை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமுற்ற அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்தனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் போலீஸார் ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, அந்த இளைஞரை அங்கேயே விட்டுவிட்டு திரும்பி சென்றனர்.

கழுத்தில் காயமுற்ற கவிதாலயா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் போலீஸார் விசாரணையில் அந்த இளைஞர் பரங்கிப்பேட்டை கொடிமரத்து தெருவைச் சேர்ந்த பாஷா என தெரியவந்தது. இதுகுறித்து கிள்ளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.