தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்துநகர் 6-வது தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன் (33). இவர் தாளமுத்துநகரில் சூப் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணனின் தாய் வசித்து வந்த வீட்டில், இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக கண்ணன் மீது அவருடைய தாயாருக்கு சந்தேகம்
தற்போதைய செய்திகள்தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்துநகர் 6-வது தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன் (33). இவர் தாளமுத்துநகரில் சூப் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணனின் தாய் வசித்து வந்த வீட்டில், இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக கண்ணன் மீது அவருடைய தாயாருக்கு சந்தேகம்
தூத்துக்குடியில் வீட்டில் நகை திருடியது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், அவமானம் அடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் 6-வது தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன் (33). இவர் தாளமுத்துநகரில் சூப் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணனின் தாய் வசித்து வந்த வீட்டில், இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக கண்ணன் மீது அவருடைய தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் கண்ணனை கண்டித்து, நகை பற்றி கேட்டார். கண்ணனும், நகை, பணத்தை தான்தான் எடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து கண்ணனை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கண்டித்ததாக கூறப்படுகிறது.
தான் திருடியது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டதே என்ற அவமானத்தில் மனவேதனை அடைந்த கண்ணன் வீட்டில் இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.