ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் இசைத் தொகுப்பு விழா: யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணி பங்கேற்பு
சுந்தர் வரதராஜன் என்பவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் நண்பர். அவரது ஆலோசனையின் பேரில், ஸ்ரீஆண்டாள் குறித்து ஒரு ஆடியோ ஆல்பம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில், ஸ்ரீஆண்டாள் குறித்த 12 பாடல்கள் உண்டு. இந்த ஆல்பம் கார்த்திக்ராஜாவின் முதல் ஆல்பம். இந்தப் பாடல்களை யுவன்சங்கர்ராஜா,
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் இசைத் தொகுப்பு விழா: யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணி பங்கேற்பு
சுந்தர் வரதராஜன் என்பவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் நண்பர். அவரது ஆலோசனையின் பேரில், ஸ்ரீஆண்டாள் குறித்து ஒரு ஆடியோ ஆல்பம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில், ஸ்ரீஆண்டாள் குறித்த 12 பாடல்கள் உண்டு. இந்த ஆல்பம் கார்த்திக்ராஜாவின் முதல் ஆல்பம். இந்தப் பாடல்களை யுவன்சங்கர்ராஜா,
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஸ்ரீஆண்டாள் இசைத் தொகுப்பு விழாவில் இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பாடகி பவதாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுந்தர் வரதராஜன் என்பவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் நண்பர். அவரது ஆலோசனையின் பேரில், ஸ்ரீஆண்டாள் குறித்து ஒரு ஆடியோ ஆல்பம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில், ஸ்ரீஆண்டாள் குறித்த 12 பாடல்கள் உண்டு. இந்த ஆல்பம் கார்த்திக்ராஜாவின் முதல் ஆல்பம். இந்தப் பாடல்களை யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரணி உள்ளிட்டோர் பாடியுள்ளார்கள். கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான இசை தொகுப்பு விழா கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், சென்னை ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர்கள் டாக்டர் அறிவழகி, சசி ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார். பாடகி பவதாரணி இறைவணக்கம் பாடினார். சுந்தர் வரதராஜன் தொகுப்புரை வழங்கினார்.துணை வேந்தர் பி.கன்னியப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், லஞ்ச ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்குநர் செந்தில்வேலன், சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான ஆலோசனைக் குழுத் தலைவர் கே.ஆனந்த்குமார், ஆலோசகர் மோகன்ராம், சென்னை ஆனந்த் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர்கள் அறிவழகி, சசிஆனந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.ஆல்பம் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பாடகி பவதாரணி ஆகியோர் விளக்கினர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் செய்திருந்தார். விழாவில் பல முக்கிய பிரமுகர்கள், ஏராளமான மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஆண்டாள் வரதராஜன் நன்றி கூறினார்.