முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரூராட்சிகளின் குடிநீர் தேவைக்கு முதல்வர் தனிக்கவனம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழ்நாட்டிலேயே இரு பேரூராட்சிகளில் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்சாபுரம் பேரூராட்சியும் ஒன்று. தற்போது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. பைப்லைன் போடவேண்டியுள்ளது. இதற்கும் அரசு உதவும். எல்லோரும் போற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பேரூராட்சிகளின் குடிநீர் தேவைக்கு உயர் முன்னுரிமை அளித்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என்று செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பேரூராட்சி அலுவலக கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கூறியதாவது:

தமிழ்நாட்டிலேயே இரு பேரூராட்சிகளில் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்சாபுரம் பேரூராட்சியும் ஒன்று. தற்போது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. பைப்லைன் போடவேண்டியுள்ளது. இதற்கும் அரசு உதவும். எல்லோரும் போற்றும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஊராட்சி பகுதிகளின் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, நெல்லை மாவட்டம் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் போர்வெல் அமைத்து குடிநீர் கொண்டுவர டெண்டர் விட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லோரும் போற்றும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழர்களையும், தமிழகத்தையும் வஞ்சித்து வநதாலும், தமிழக மக்கள் செல்வாக்குடன், உங்கள் பலத்துடன் முதல்வர் அனைத்து தேவைகளையும் தமிழகத்திற்கும், மக்களுக்கும் பெற்றுத்தருவார், தந்துகொண்டே இருப்பார் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →