ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயம் கட்டுவதில் பிரச்னை: 20 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மாதாநகரில் அருந்ததியர் சமுதாயத்தினர் 50 குடும்பத்தினர் உள்ளனர். இதே பகுதியில் கிறிஸ்தவ தலித்கள் 60 குடும்பத்தினர் உள்ளனர்.திருவண்ணாலை ஊராட்சியில் 3 சென்ட் காலி இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தயர்கள் காளியம்மன்கோயில் கட்டி
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயம் கட்டுவதில் பிரச்னை: 20 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மாதாநகரில் அருந்ததியர் சமுதாயத்தினர் 50 குடும்பத்தினர் உள்ளனர். இதே பகுதியில் கிறிஸ்தவ தலித்கள் 60 குடும்பத்தினர் உள்ளனர்.திருவண்ணாலை ஊராட்சியில் 3 சென்ட் காலி இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தயர்கள் காளியம்மன்கோயில் கட்டி
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் மாதாநகரில் அருந்ததியர் சமுதாயத்தினர் 50 குடும்பத்தினர் உள்ளனர். இதே பகுதியில் கிறிஸ்தவ தலித்கள் 60 குடும்பத்தினர் உள்ளனர்.திருவண்ணாலை ஊராட்சியில் 3 சென்ட் காலி இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தயர்கள் காளியம்மன்கோயில் கட்டி வழிபட்டு வந்தார்களாம். தற்போது இதே இடத்தில் கிறிஸ்தவ தலித்கள் தேவாலயம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இணக்கம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது.
இது குறித்து நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் கிறிஸ்தவ தலித் தரப்பைச் சேர்ந்த மை.அந்தோணி (40), எஸ்.ஜெம்மா (35), வி.ஜோதி (48), கு.மரியஷீலா (29), யூ.ஜான்சிராணி (30), மை.ஜோசப் (40), வி.சந்தனம் (48), க.இயேசம்மாள் (50), எஸ்.குரூஸ் (40), எஸ்.ஜெயராஜ் (32) ஆகியோர் மீதும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த எம்.எஸ்.பி.காலனி மு.பாண்டி (50), மா.முனியாண்டி (21), கோ.இந்திரா (42), மா.முத்துமாரி (48), க.காந்திமதி (40), க.பால்ச்சாமி (43), பொ.குருவம்மாள் (30), மு.விஜயா (25), கு.காளியம்மாள் (51), சி.மாடசாமி (45) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.