முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள் மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் புலியக்குலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45).  இவர் 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை தன் மகளிடம் பாலியல் பாலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:13 AM
பகிர்:

கோவையில் புலியக்குலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45).  இவர் 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை தன் மகளிடம் பாலியல் பாலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதன் காரணமாக  அந்த பெண் இரண்டு முறை கர்ப்பம் தரித்துள்ளார். இதில் ஒருமுறை கருகலைப்பு செய்ய முடியாத சூழ்நிலையில் அறுவைசிகிச்சை மூலம் 6 மாத குழந்தை பிறந்து இறந்துள்ளது.

இதற்கு பின்னும் பழனிசாமி தன் மகளிடம் தொடர்ந்து  பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் அந்த பெண்  31-7-2009 ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பழனிச்சாமி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் நீதிபதி சுப்ரமணியன் பழனிச்சாமி குற்றவாளி எனவும்,அவறுகுறிய தண்டனை விபரம் வரும் 28-ம் தேதி வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார். இதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளி பழனிசாமிக்கு ஆயுள்தண்டனை மற்றும் 7 ஆண்டுகடுங்காவல் தண்டனையும் ரூ.8000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →