ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: இருவர் காயம்: நான்கு பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், துரையப்பன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (19). இவர் தனது நண்பர்களுடன் குன்னூரில் உள்ள தண்ணீர்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: இருவர் காயம்: நான்கு பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், துரையப்பன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (19). இவர் தனது நண்பர்களுடன் குன்னூரில் உள்ள தண்ணீர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். போலீஸார் நால்வர் மீது வழ்ககுப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், துரையப்பன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (19). இவர் தனது நண்பர்களுடன் குன்னூரில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மணிகண்டனையும், அவரது தந்தையையும் தேவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் என்பவர் தரக்குறைவாக பேசினாராம். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மணிகண்டன் தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் இதனை பிரகாஷிடம் சென்று கேட்டு வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் மணிகண்டனை வழிமறித்து ஆபாசமாகப் பேசி செங்கலால் தாக்கி பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து மணிகண்டன், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரகாஷின் தாய் கற்பகம் (45), கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு விவரம் வருமாறு: கற்பகம் தனது மகன் பிரகாஷ், மகள் அனுஷ்யாவுடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன், ஜெயச்சந்திரன் மனைவி முத்து மற்றும் முனியம்மாள் ஆகியோர் வந்து ஆபாசமாகப் பேசினார்களாம். மேலும் பிரகாஷை, மணிகண்டன் கையால் தாக்கியதில் ஊமைக்காயம் ஏற்பட்டதாம்.குறித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.