முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் மகன் பலி

புதுச்சேரி அருகே மின்சாரம் தாக்கி சென்னையை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் இறந்தார்.

Updated On : 1 ஜூலை, 2013 at 11:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

புதுச்சேரி அருகே மின்சாரம் தாக்கி சென்னையை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் இறந்தார்.

 புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் வீரப்பன்(44). சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் விமல்ராஜ்(24). கேட்டரிங் படிப்பு முடித்துள்ளார்.

 இந்நிலையில் பாகூர் அருகே டி.என்,பாளையம் ஆற்றுப்பகுதியில் சாராயக்கடை குத்தகைக்கு எடுத்திருந்த வெங்கடேசன், குத்தகை காலம் முடிந்ததால் தனக்கு சொந்தமான பொருட்களை, திங்கள்கிழமை அப்புறபடுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற விமல்ராஜை அழைத்து மின்விசிறியை அவிழ்க்க கூறியுள்ளார். விமல்ராஜ் மின்விசிறியை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் விமல்ராஜ் அந்த இடத்திலேயே இறந்தார்.

Advertisement

 இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சாரயக்கடை குத்தகைதாரர் வெங்கடேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.