முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் படுகொலை

மாலை 4 மணி அளவில் வேலூர் பேருந்து நிலையம் முன் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Updated On : 1 ஜூலை, 2013 at 4:51 PM
பகிர்:

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார்.

மாலை 3.15 மணி அளவில் வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்துமண்டபம் பின்புறம் பாலாற்றங்கரையோரம் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், சம்பவ இடத்தில் குவிந்த இந்து முன்னணியினர் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர். 

பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தி சமாதானப் படுத்தினார். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.