உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம் புதுச்சேரியில் தோல்வி: அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் 4,500 தாற்காலிக ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.அரசின்
உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தோல்வியடைந்து விட்டது என இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டினார்.புதுச்சேரியில் இந்து மக்கள் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் 4,500 தாற்காலிக ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.அரசின் தவறான நிர்வாகம், பகிர்மானக் கொள்கை காரணமாக முன் அறிவிப்பில்லாத மின்தடை அதிகளவில் செய்யப்படுகிறது. மின்தடை வாட்டும் அதே நேரத்தில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் தோல்வியடைந்துள்ளது. உரியவர்களுக்கு நலத்திட்டம் சென்றடைவதில்லை. வாழும் காமராஜர் என முதல்வர் ரங்கசாமியை அழைக்கின்றனர். ஆனால், காமராஜர் மணி மண்டபம் பாழடைந்து கிடக்கிறது.
சிறுபான்மையினரின் புனித யாத்திரைக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும், மதச்சார்பற்றது எனக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு, உத்தரகண்டில் ஹிந்து யாத்ரீகர்களைக் காக்க போதிய முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.இந்த பேரிடருக்கு இயற்கை காரணம் என்ற போதும், அதிக உயிர்ச்சேதத்துக்கு மனிதத் தவறே காரணம். சிறுபான்மையினரின் வாக்குவங்கி என்ற மாயைக்காக, பெரும்பான்மை ஹிந்துக்களை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன என்றார் அவர். பேட்டியின் போது, இந்து மக்கள் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் மஞ்சினி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.