தற்போதைய செய்திகள்

முகூர்த்த நேரத்தில் இருவீட்டார் பிரச்னையால் மணமகன் மண்டை உடைந்தது

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவள்ளி. இங்குள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் துரைமுருகன்(33). இவர் சென்னையில்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் முகூர்த்த நேரத்தில் நகை குறித்து இருவீட்டார்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் மணமகனின் மண்டை உடைந்தது. மேலும், நடக்க இருந்த திருமணம் தடைப்பட்டது குறித்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவள்ளி. இங்குள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் துரைமுருகன்(33). இவர் சென்னையில் தேசிய வங்கிக்கிளை ஒன்றில் மேலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் பாக்கியமுத்து என்பவரின் மகள் சகுந்தலாதேவி(25). இவர் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்துவதற்கு பெரியோர்களால் நிச்சயம் செய்திருந்தனர். அதோடு, திருமணத்திற்காக 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசு போக்குவரத்து பணிமனை அருகே தனியார் அரங்கத்திலும், முகூர்த்தம் மற்றும் தாலி கட்டும் வைபவம் சுப்பிரமணியர் திருக்கோயிலும் வைத்து இன்று நடைபெறுவதாக இருந்தது. அதற்காக இருவீட்டாரை சேர்ந்த உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து தங்கியிருந்தனர்.அதையடுத்து காலையில் சுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில்  திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டார்களும் மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். அப்போது, மணமகள் பேசிய நகையை அணியாமல், கவரிங் அணிந்து வந்தது குறித்து பிரச்னை ஏற்பட்டது. அப்போது மணமகன் வீட்டார் உடனே நகை மற்றும் பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இப்பிரச்னையால் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், மணமகன் துரைமுருகனுக்கு மண்டை உடைந்து ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பெண் வீட்டார் தரப்பினர் திருமண அரங்குகிற்கு சென்று பிளக்ஸ் பேனர் மற்றும் விருந்து சாப்பாடு ஆகியவைகளை கொட்டி சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக பெண் வீட்டார் தரப்பில் சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். முகூர்த்த நேரத்தில் திருமணம் நின்றது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT