முகப்பு
தற்போதைய செய்திகள்

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு

இதேபோல் கடனாநதி அணையில் 8.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 7.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 7 மி.மீ மழையும் பெய்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 134.41 அடியாக இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 21 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 7 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 11.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல் கடனாநதி அணையில் 8.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 7.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 7 மி.மீ மழையும் பெய்துள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3522.52 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1551 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 120.95 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 134.41 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.56 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 59 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 798 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து 180 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →