முகப்பு
தற்போதைய செய்திகள்

வி.கே. புரம் நகராட்சித் தலைவி ஜீப்பில் தண்ணீர் ஊற்றி முடக்கம்: போலீஸில் புகார்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவி இ. மனோன்மணி (அதிமுக). நகராட்சிவருவாய் உதவியாளர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தலைவிக்கும் நகராட்சி பணியாளர்களுக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:46 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவிக்குவழங்கப்பட்ட ஜீப் டீஸல் டேங்க்கில் தண்ணீர் ஊற்றியதால் ஜீப் பழுதடைந்தாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவி இ. மனோன்மணி (அதிமுக). நகராட்சிவருவாய் உதவியாளர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தலைவிக்கும் நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதனிடையே நகராட்சி ஆணையரை கண்டித்து தலைவி, துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துநகராட்சி ஆணையர் பி. அயூப்கான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நகராட்சித் தலைவிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ஜீப் கடந்த சில தினங்களுக்கு முன் பழுதானது. புதிதாக வழங்கப்பட்ட ஜீப் திடீரென பழுதானது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஜீப்புக்கு டீஸல் நிரப்பும் டேங்க்கில் தண்ணீர் ஊற்றியதால் ஜீப் செயல் இழந்தது என தெரியவந்தது. இது குறித்து நகராட்சித் தலைவி இ. மனோன்மணி விக்கிரமசிங்கபுரம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →