முகப்பு
தற்போதைய செய்திகள்

வீரவநல்லூர் ஒரே நாளில் 2 கோவிலில் திருட்டு

வீரவநல்லூர் திருப்புடைமருதூர் செல்லும் சாலையில் ராகேவந்திரா கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகி பார்வதி அம்மாள். கோவில் வளாகத்தில் உள்ளவீட்டில் பார்வதிஅம்மாள் தங்கியிருக்கிறார். வெளியூர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:46 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ராகவேந்திரா கோவில், கருமாரி அம்மன் கோவிலில் பணம், சாமி நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீரவநல்லூர் திருப்புடைமருதூர் செல்லும் சாலையில் ராகேவந்திரா கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாகி பார்வதி அம்மாள். கோவில் வளாகத்தில் உள்ளவீட்டில் பார்வதிஅம்மாள் தங்கியிருக்கிறார். வெளியூர் சென்றிருந்த பார்வதிஅம்மாள் இன்று கோவிலுக்கு வந்தார்.அவர் தங்கியிருந்த வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ. 20,000 மற்றும் வெள்ளி சாமிக் கண்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.இதேபோல் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் வீரவநல்லூர் அருகே கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுவர் ஏறி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் அணிந்திருந்த 21 கிராம் எடையுள்ள தங்க நகையை திருடிசென்றுள்ளனர்.

தகவலறிந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. (பொறுப்பு) பா. மணிமாறன், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →