முகப்பு
தற்போதைய செய்திகள்

முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் ஜூலை 15-ல் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அனுமதி சேர்க்கையில் எலக்டிரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:46 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்:

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அனுமதி சேர்க்கையில் எலக்டிரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க இந்த ஆண்டு சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →