முகப்பு
தற்போதைய செய்திகள்

பொறையாறு பாசிக்குளத்து விநாயகர் கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்

கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கோபூஜை ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:48 PM
பகிர்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள எடுத்துக்காட்டி-சாத்தனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாசிக்குளத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி காமகோடி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கோபூஜை ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

திங்கள்கிழமை காலை நான்காம் கால பூஜை மற்றும் யாத்ராதானம் நடைபெற்றது. தொடர்ந்து காஞ்சி காமக்கோடி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழக்கத்துடன் புனித நீரால் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வித்தனர். பொறையார்,தில்லையாடி,சங்கரன்பந்தல் உள்ளிட்ட பல கிராமகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி முழக்கத்தோடு கும்பாபிஷேகத்தை கண்டு இறைவனை தரிசித்தனர்.பின்னர் பாசிக்குளத்து விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைஆகியவை நடைபெற்றன.

Advertisement

பாசிக்குளத்து விநாயகர் கோவில் அமைந்துள்ள அதே தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாழம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் அதே நேரத்தில் நடைபெற்றது. இரு கோவில் கும்பாபிஷேகமும் காஞ்சி காமக்கோடி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்ப்பாடுகளை ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்தனர்.

பொறையார் கற்பக விநாயகர் கோவில்:

பொறையார் பட்டுநூல்கார வீதியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை காலையுடன் இரண்டுகால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பொறையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments