ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி
ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில், திருநீலகண்டன் தெருவைச் சேர்ந்த அப்பு (44), வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து அப்புவை கைது செய்தனர்.