ஆட்டோ ஓட்டுநர் மர்ம சாவு விசாரணை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில நிர்வாகி திருமாறன் கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஆ.ராதிகாவிடம் அளித்த மனு விவரம். விருத்தாசலம் வட்டம் பூலாம்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 16-ம் தேதி லட்சுமணபுரம் தனியார் பள்ளி அருகே அடிப்பட்ட நிலையில் கிடந்தார்.
ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில நிர்வாகி திருமாறன் கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஆ.ராதிகாவிடம் அளித்த மனு விவரம். விருத்தாசலம் வட்டம் பூலாம்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 16-ம் தேதி லட்சுமணபுரம் தனியார் பள்ளி அருகே அடிப்பட்ட நிலையில் கிடந்தார்.
அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் விபத்தினால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை.
Advertisement
அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முன்விரோதம் உள்ளது. ஆகவே மணிகண்டன் இறப்பு குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அவர் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.