முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவர் கைது

அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த சவுண்டையா என்பவரின் மகன் விஜயகுமார்(29). இவருக்கும் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா(26) என்பவருக்கும் கடந்த மூன்று

Updated On : 19 ஜூலை, 2013 at 5:24 PM
பகிர்:

அருப்புக்கோட்டையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கூறியாதவது:

அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த சவுண்டையா என்பவரின் மகன் விஜயகுமார்(29). இவருக்கும் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா(26) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.அப்போது, 12 சவரன் நகையும், 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 40 ஆயிரம் மதி்ப்பிலான சீர்வரிசை பொருள்களும் சீதனமாக வழங்கப்பட்டதாம். இந்நிலையில் கூடுதல் வதரட்சணையாக ரூ.70 ஆயிரம் பணம் வேண்டும் எனக் கூறி கணவரும் அவரது குடும்பத்தினருமான மாமியார் வீரமணி, மாமானார் சவுண்டையா ஆகியோர் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், கொண்டு வந்தால் தான் வீட்டில் இருக்க முடியும் எனக் கூறி துரத்தினார்களாம்.

Advertisement

இதனால், ஆத்திரம் அடைந்த ராதிகா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு கணவர் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும், மாமியார், மாமானார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.