முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டில் கருந்திரி தயாரித்த இளைஞர் கைது: 500 குரோஸ் கட்டுக்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை வீட்டில் தயாரித்த இளைஞரை போலீஸார் கைது செய்து 500 குரோஸ் கருந்தி கட்டுக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை

Updated On : 19 ஜூலை, 2013 at 5:40 PM
பகிர்:

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை வீட்டில் தயாரித்த இளைஞரை போலீஸார் கைது செய்து 500 குரோஸ் கருந்தி கட்டுக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் நடுத்தெரு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் வீட்டிற்குள் கருநதிரிகளை தயாரித்துக் கொண்டிருந்த வேல்முருகன்(20) என்ற இளைஞர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், வீட்டிற்குள் சோதனையிட்டத்தில் சாக்கு பையில் இருந்த 500 குரோஸ் கட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.