முகப்பு
தற்போதைய செய்திகள்

கம்பத்தில் குடிபோதையில் போலீஸாருடன் தகராறு: போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்த ஒருவர் கைது

குடிபோதையில் போலீஸாருடன் தகராறு செய்து, ஆய்வாளர் ஜீப் கண்ணாடியை உடைத்த ஒருவரை திங்கட்கிழமை இரவு தெற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

குடிபோதையில் போலீஸாருடன் தகராறு செய்து, ஆய்வாளர் ஜீப் கண்ணாடியை உடைத்த ஒருவரை திங்கட்கிழமை இரவு தெற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

         கம்பம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் முகமதுசாதீக்(35), இவர் குடிபோதையில் கம்பம் காந்தி சிலை அருகே சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தாராம். அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகுமார் முகமது சாதீக்கை கண்டித்து அனுப்பினாராம்.  பின்னர், காந்தி சிலை கீழ்புரம் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் இருந்து காவலர் வெங்கடேஸ்சிடம் தொடர்ந்து தகராறு செய்தாராம் முகமதுசாதீக்,  இது குறித்து காவலர் வெங்கடேஷ் ஆய்வாளர் பாலகுமாரிடம் தகவலர் தெரிவித்துள்ளார். முகமது சாதீக்கை போலீஸார் பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றபோது, பாலகுமார் ஆய்வாளரின் ஜீப் கண்ணாடியை காலால் உதைத்து முகமதுசாதீக் உடைத்தாராம்.

         இது குறித்து ஆய்வாளர் பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி வழக்கு பதிந்து, குடிபோதையில் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், 5 ஆயிரம் மதிப்புள்ள போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக வழக்கு பதிந்து முதுமது சாதீ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.