கும்மிடிப்பூண்டியில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்: 65 பேர் கைது
தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சேலத்தில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க இன்று தமிழகத்தில் பந்த் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய
தற்போதைய செய்திகள்கும்மிடிப்பூண்டியில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்: 65 பேர் கைது
தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சேலத்தில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க இன்று தமிழகத்தில் பந்த் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய
பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி மற்றும் பெரியபாளையத்தில் பா.ஜ.க-வினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சேலத்தில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க இன்று தமிழகத்தில் பந்த் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் ஏ.கே.மூர்த்தி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் தேவதாஸ் முன்னிலையிலும் பா.ஜ.க-வினர் பெரியபாளையம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களை பெரியபாளையம் போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.அதே போல கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 18 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.