முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரிக்கை

சிசேல் நாட்டில் உயிரிழந்த நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காழியாய்ப்பநல்லூரைச் சேர்ந்த இளைஞரின்  உடலை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

சிசேல் நாட்டில் உயிரிழந்த நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காழியாய்ப்பநல்லூரைச் சேர்ந்த இளைஞரின்  உடலை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறையாறு அருகே உள்ள காழியப்பநல்லூரில் வசித்துவரும் பாலு-சுந்தரி தம்பதியர் மகன் குணசீலன் (30).இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிசேல் நாட்டில் உள்ள மமேல் என்னும் இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இன்னும் ஒருமாதத்தில் ஊருக்கு திரும்ப உள்ளதாக அண்மையில் வீட்டுக்குக்கு தகவல் சொல்லியுள்ளார்.இந்நிலையில் குணசீலன் வேலை செய்துகொண்டிருக்கும்போது மண் சரிந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாக கடந்த 19 ந்தேதி  தொலைபேசி மூலம் வீட்டிற்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.உடனடியாக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் குணசீலன் இறந்துவிட்டதாக வந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் பாலு-சுந்தரி தம்பதியர் காழியப்பநல்லூரில்  திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

Advertisement

தங்களது மகன் எப்படி இறந்தார் என்று முழுமையாக தெரியவில்லை என்றும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து குணசீலனின் உடலை மீட்டு விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக முதலவருக்கும் நாகை மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும் தமிழக முதலவர் தங்களுக்கு உதவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments