முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏவை கைது செய்யக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து

Updated On : 23 ஜூலை, 2013 at 4:27 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏவை கைது செய்யக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் உள்ளிட்ட  பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைக் கடை தெருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்து தருவதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் கடிதம் கொடுத்தனுப்பியுள்ளார். அந்த மனு மீது வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் மாரியப்பன் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் செய்தாராம். இதையடுத்து, அங்கு சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் வாக்குவாதம் செய்து உதவியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் உதவியாளர் மாரியப்பன் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் உடனே சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலங்களில் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், கிராமங்களில் நடைபெற இருந்த அம்மா திட்ட முகாம் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதோடு, பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர்க்கைகான ஜாதி மற்றும் வருவாய் சான்றிதழ்கள், வறட்சி நிவாரணப் பணிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு சான்றிளித்தல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.