விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 420 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் மற்றும் ஊதிய முரண்பாடுகளை களையவும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் ஈடுபட்ட 96 பெண்கள் உள்பட 420 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.