முகப்பு
தற்போதைய செய்திகள்

பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது வங்கிக் கடன்கள்: ப.சிதம்பரம்

வங்கிகள் மட்டும் அதிகளவில் ஏன் திறக்கப்பட்டு வருகிறது என்று பொதுவான ஒரு கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் நகரில் வங்கியின் தேவை அதிகமாக உள்ளதால் புதிய

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது வங்கிக் கடன்கள் என்றார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

சிவகங்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஆராயிரத்தி ஓராவது புதிய கிளையை இன்று திறந்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது:-

வங்கிகள் மட்டும் அதிகளவில் ஏன் திறக்கப்பட்டு வருகிறது என்று பொதுவான ஒரு கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் நகரில் வங்கியின் தேவை அதிகமாக உள்ளதால் புதிய கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிய வங்கிகள் வருகையின் மூலம் வங்கிகளுக்கிடையே போட்டி ஏற்படும் போது அங்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. வங்கித் தேவை அதிகரிக்க காரணம் வியாபார பெருக்கம் தான்.

Advertisement

உலக பொருளாதாரம் மந்தமாக உள்ள இந்த நிலையில் ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது பூஜ்ஜிய நிலையிலும், இங்கிலாந்தில் 0.5 சதவீதத்திலும் உள்ளது. நடப்பாண்டில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட சீனா முதல் இடத்திலும், 6 சதவீத வளர்ச்சியைக் கொண்ட இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. நாடு முழுவதிலும் சீரான வளர்ச்சி உள்ளது, சிவகங்கையில் திறக்கப்பட்ட நாளன்றே இப்புதிய கிளையின் மூலம் மட்டும் ரூ.1.65 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. இது போன்ற கடன் திட்டங்களே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments