தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் 40 பேர் பாதிப்பு

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் அடிப்படை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யாததால் மர்ம காய்ச்சல் பரவி 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சுகாதார

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் அடிப்படை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யாததால் மர்ம காய்ச்சல் பரவி 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சுகாதார துறையினர் மூலம் தடுப்பு நடவடிக்கை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு ஊராட்சி அலுவலகம் பின்புறம் கிழக்கு பகுதியில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளான தமிழ்செல்வி(15), வீரகாளிஸ்வரன்(14), செல்வம்(13) மற்றும் அம்மாபட்டியைச் சேர்ந்த குணசேகரன், மாரியம்மாள் உள்ளிட்ட பலருக்கு  காய்ச்சல் இருந்து உள்ளது. இந்த காய்ச்சலால் கை,காலில் மூட்டு வலி போன்றவைகளால் எழுந்து நடக்க முடியாத நிலையிருந்தது. அதோடு, அருகில் உள்ள கன்னிசேரி ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதையடுத்து, அந்த தெருவில் மேலும் பலருக்கு காய்ச்சல் பரவி 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தீவிரமாக பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி, வீரகாளீ்ஸ்வரன் உள்ளிட்ட 9 பேருக்கு கன்னிசேரி ஆராம்ப சுகாதார நிலையத்திலும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஆனந்தராமன் கூறுகையில், கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்டவைகள் நாள்தோறும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, குடிநீரும் சுத்தமாகவே வழங்கப்பட்டு வருவதாக மட்டும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட துணை சுகாதார துறை இயக்குநர் டாக்டர்.சண்முகராஜன் கூறியதாவது: இப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்தாலும், சமமாக இல்லாத நிலையில் மறுபடியும் கழிவு நீர் அங்கங்கே தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது பொதுமக்களுக்கு பரவியுள்ளது வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கு காலச்சூழ்நிலை தான் காரணமாகும்.

இக்கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் குளோரினேசன் செய்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குடிதண்ணீர் பானைகளை மூடி வைக்கும் படியும், தெருவோரங்களில் உள்ள வீட்டிற்கு முன்பு பிளாஸ்டிக் பொருள்கள், டயர் உள்ளிட்டவைகளை அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கழிவு நீர் வாய்க்கால் முழுவதும் கொசுக்களை ஒழி்க்கும் மருந்து தெளிப்பதற்கு சுகாதார துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, ரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை சுகாதார இயக்குநர் சண்முகராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT