முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலில் சூறைக்காற்று: தூத்துக்குடி விசைப்படகுகள் கரை திரும்பின

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியிலிருந்து சுமார் 25

தற்போதைய செய்திகள்

கடலில் சூறைக்காற்று: தூத்துக்குடி விசைப்படகுகள் கரை திரும்பின

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியிலிருந்து சுமார் 25

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

கடல்பகுதியில் சூறைக்காற்று வீசியதால் தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கரைக்குத் திரும்பின.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சூறைக்காற்று வீசியதாகக் கூறப்படுகிறது.மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் திணறினராம். படகுகளை நிலைநிறுத்த முடியாமல் தவித்த மீனவர்கள், தங்களது விசைப்படகில் உள்ள தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் சக மீனவர்களுடன் தொடர்புகொண்டனர்.

இருப்பினும், தொடர்ந்து காற்று பலமாக வீசியதால் மீனவர்கள் கரை திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து, அனைத்துப் படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டன. வழக்கமாக இரவு 9 மணியளவில் கரைக்கு வர வேண்டிய அனைத்து விசைப்படகுகளும், பகல் 2 மணிக்குள் கரைக்கு வந்து சேர்ந்தன.இதனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியவில்லை எனவும், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஒருவாரம்கூட ஆகாத நிலையில், சூறைக்காற்று வீசியதால் தங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.நாளொன்றுக்கு ஒரு விசைப்படகு மூலம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மீன்கள் பிடிக்கும் தங்களுக்கு, அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →