முகப்பு
தற்போதைய செய்திகள்

இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர்

Updated On : 9 ஜூன், 2013 at 3:15 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு சேர்க்கையை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடந்தது. இதில் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகளைத் தவிர) நுழைவு வகுப்பில் சேர்வதற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர்வதற்கு பள்ளிக்கு அருகே 1.5 கி.மீ., தூரத்திற்குள் இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பள்ளிகளில் விண்ணபிக்க விரும்பும் பெற்றோர். வரும் 10 மற்றும் 11ம் தேதி ஆகிய நாட்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் விதிப்படி சேர்க்கைகோரும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி சேர்க்க வேண்டும். இதனை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.