திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (41). திமுகவைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ராஜாமணி தனது நண்பர்கள் சிலருடன் அங்குள்ள மதுக்கூடத்தில் சனிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாராம்.அப்போது, மற்றொரு திமுகவைச் சேர்ந்த
தற்போதைய செய்திகள்திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (41). திமுகவைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ராஜாமணி தனது நண்பர்கள் சிலருடன் அங்குள்ள மதுக்கூடத்தில் சனிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாராம்.அப்போது, மற்றொரு திமுகவைச் சேர்ந்த
தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக மற்றொரு கவுன்சிலர் உள்பட நால்வர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (41). திமுகவைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ராஜாமணி தனது நண்பர்கள் சிலருடன் அங்குள்ள மதுக்கூடத்தில் சனிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாராம்.அப்போது, மற்றொரு திமுகவைச் சேர்ந்த வழக்குரைஞரும், 48-வது வார்டு கவுன்சிலருமான அன்பரசன் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது, ராஜாமணி தரப்புக்கும், அன்பரசன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதையெடுத்து, அந்தப் பகுதியில் இருந்த சிலர் இருதரப்பினரையும் தடுத்து சமரசம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனராம். இந்நிலையில், அன்பரசன் உள்ளிட்ட சிலர் சிறிது நேரத்தில் ராஜாமணியின் வீட்டுக்கு சென்றனராம்.
வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ராஜாமணியை அன்பரசன் தரப்பினர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், ராஜாமணியன் இடது கையில் காயம் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட அவர் கூச்சலிட்டப்படி வீட்டுக்குள் ஓடி தப்பித்துக் கொண்டாராம்.இதையெடுத்து, அவரை வெட்டிய நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்த ராஜாமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே, திமுக கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் சிலர் விசாரணை மேற்கொண்டனராம்.கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதால் அன்பரசன் மீது அளித்த புகாரை கவுன்சிலர் ராஜாமணி திரும்ப பெற்றுக் கொண்டாராம். மேலும், அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறியை அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.